கதைகளில்
சம்பரதாயமாக கடைபிடிக்கப்படும் அந்த
ஏழு கடல் ஏழு மலையையும் தாண்டி அந்த குகையை ஏழு நாட்கள் கழித்து கண்டுபிடித்தேன் .
ஆனால்
அந்த குகையில் இருப்பதாக சொல்லப்பட்ட அந்த ஒற்றை அற்புத விளக்கை காணவில்லை
ஒருவேளை அதை அந்த அரேபியா இரவுகளில் வரும்
அந்த நாற்ப்பது திருடர்கள் திருடி சென்றிருக்கலாம்
என்று நினைத்து கொண்டிருந்த வேளையில்
எதோ ஒரு அழுகுரல் குகையின் அடி பகுதியில் இருந்து கேட்டது
அங்கே சென்று பார்த்தபோது.
ஒரு பூதம் மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தது.
என்னை பார்த்ததும் அந்த பூதம் என்னை காப்பாற்றுங்கள்
நான் வசித்து வந்த அற்புத விளக்கை யாரோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் திருடிவிட்டார்கள் என்றது.
அந்த விளக்கு இல்லாமல் நான் ஆயிரம் ஆண்டுகளாக தூங்கவில்லை என்றது.
விளக்கை மீட்டு வந்தால் தான் நான் அதன்னுள் தூங்க முடியும் என்று வருத்தப்பட்டுக்கொண்டது
அந்த விளக்கை யார் திருடி இருக்க கூடும் என்று அதனிடமிருந்த சில முக்கிய தடையங்களை என்னிடம் கொடுத்தது.
அதை வாங்கிப் பார்த்தபொழுது அதில் ஒரு முத்து இருந்தது.
அந்த முத்தை பார்க்கும் பொழுது அது கன்னித் தீவு சிற்பிகளால் செய்யப்பட்டது போல் இருந்தது.
ஆகவே அந்த விளக்கு கன்னித் தீவில் தான் இருக்க வேண்டும் என்று தோராயமாகக் கண்டுபிடித்தேன்.
ஆனால் அந்த கன்னித் தீவுக்கு சென்று ஒருவர் எளிதில் வெளியேறுவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பது எனக்கு நன்கு தெரியும், அது ஆளை விழுங்கும் மர்ம கண்ணிகள் நிறைந்த தீவு,அந்த தீவைப் பற்றி ஆயிரம் ஆயிரம் கதைகள் கேட்டிருக்கிறேன் , இருந்தாலும் அந்த பூதத்தின் உறக்கத்துக்காக நான் அங்கு சென்றே தீரவேண்டும்.
மீண்டும் சம்பிரதாய முறைப்படி அந்த ஏழு கடல் ஏழு மலைகளையும் கடந்து ஏழு நாட்கள் கழித்து , கன்னித் தீவு வந்தடைந்தேன் ,
நான் கன்னித் தீவு வருவதை அங்கு உள்ள கன்னியர்கள் முன்பே அறிந்திருந்தனர் , நான் வந்திறங்கியதும் ஆயிரம் கன்னிப்பெண்கள் கூடி நின்று தடபுடலாக வரவேற்றனர்
அதை பார்க்கவே ஆயிரம் கண்கள் வேண்டும் அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது அந்த வரவேற்ப்பு நிகழ்ச்சியில்
மதிமயங்கி போனேன்.
பிறகு அங்கு திக்கற்று திரிந்த ஒரு குருடன் என்னருகில் வந்து நீ தானே அந்த அற்புத விளக்கை தேடி வந்தவன் என்று சரியாக என்னை கண்டுபிடித்துவிட்டான்.
(தொடரும்)

No comments:
Post a Comment